கூட்டமைப்பின் ஆளுமையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திருமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை தமதாக்கியது ஈ.பி.டி.பி – பெரமுன கூட்டணி !

Friday, January 15th, 2021

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பெரமுன கூட்டணி கைப்பற்றியுள்ளது.

முன்பதாக தமிழ் தேசிய கூட்;டமைப்பின் ஆழுகைக்குள் இரந்த குறித்த பிரதேசசபையின் ஆட்சி மக்களது நலன்களை முன்னிறுத்தாது ஆளுமையற்ற ஓர் ஆட்சியாகவே இருப்பதாக குறித்த பிரதேச மக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்தனர்.

இந்நிலையில் 22 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டு தடவைகளும் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரது ஆளுமையற்ற ஆட்சிக்க முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சபைக்கான புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றையதினம் குறித்த மாவட்டத்தின் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆளுமை அற்ற ஆட்சியை நிராகரித்து தமிழ் மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்குடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பெரமுன ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்காக போட்டியிட்டிருந்தனர்.

இதில் குறித்த கூட்டணிக்கு ஆதரவாக 12 உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பக்கு ஆதரவாக 10 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

இதையடுத்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பெரமுன ஆகியவற்றின் கூட்டணி வெற்றிபெற்று உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை தனதாக்கிக்கொண்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியுள்ளதை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கைவிடப்பட்ட தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகளையும் சேவைகளையும் சிறப்பாக முன்னெடுத்தச் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகளை, எஞ்சி இருக்கும் ஒன்றரை ஆண்டுகாலத்திற்கும் மேற்கொள்ள தாம் உறுதி பூண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: