வரி அதிகரிப்பு உணவு பொருட்களின் விலைகளை பாதிக்காது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எச்சரிக்கை!

Thursday, January 11th, 2024

வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை, மாறாக குறைவடைந்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வற் வரி தொடர்பில் நாடாளுமன்றம் கலக்கமடைந்துள்ள அளவுக்கு சந்தையில் கலக்கமேதும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளாது போலியாக பெறுமதி சேர் வரியை வாடிக்கையாளர்களிடம் அறவீடு செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற வற் வரி விழிப்புணர்வு கருத்தரங்கில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

போலியாக வெற் வரி அறவீடு செய்து மோசடியாக இலாபமீட்டும் தரப்புக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களிடம் வரி அறவீடு செய்து அவற்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்காதவர்கள் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றில் பதிவு சான்றிதழை காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எத்தகைய பொருளாதார நிலையில் இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் இந்த காலகட்டம் மிகவும் கஷ்டமானது என்று சொல்ல வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வரி சேகரிப்பு செயற்பாடுகளை விஸ்தரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் நேரடி வரி வீதம் 40 விகிதம் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை இதுவரை 20% ஆக இருந்த நேரடி வரி விகிதத்தை படிப்படியாக 30% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடி வரியை மேலும் 40% ஆக மேலும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் மறைமுக வரிகளின் சதவீதத்தை குறைக்கும் திறன் அரசுக்கு உள்ளது.

அத்துடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல் பாவனையாளர்களுக்கு போலி பற்றுச்சீட்டுகளை வழங்கி, முறையற்ற விதத்தில் இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாகத் தடுக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: