70 சதவீத மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக பூர்த்தி செய்வதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் – இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நம்பிக்கை!

Thursday, September 21st, 2023

நாட்டின் 70 சதவீத மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக பூர்த்தி செய்வதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அபிவிருத்தி செய்வதன் மூலம் எரிபொருளுக்காக செலவிடப்படும் பணத்தை நாட்டில் தக்க வைத்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான செலவினத்தை குறைப்பதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்க முடியும். இதற்காக செலவிடப்படும் பணத்தை ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

தற்போது, கூரைகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்கலங்களின் ஊடாக 685 மெகாவட் மின்சாரமும், நிலத்தில் பொருத்தப்பட்ட சூரிய மின்கலங்களினால் 140 மெகாவட் மின்சாரமும், காற்றாலை மின் நிலையங்களின் ஊடாக 263 மெகாவட் மின்சாரமும் மின்கட்டமைப்பிற்கு வழங்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: