7 சிறுவர்கள் உயிரிழப்பு – கல்வி நடவடிக்கைகளை நிறுத்த கல்வி அமைச்சர் உத்தரவு!
Monday, May 28th, 2018
தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக மேலதிக நேர வகுப்புக்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதியே இந்தக் கோரிக்கையினை முன்வைப்பதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்திர தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரையில் இந்த தொற்றால் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதேவேளை இதுவரை 7 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
டெங்கு நோயாளர்களுக்கு தனியான வசதி - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
எகிப்தில் ஐ.நா. பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


