பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, October 27th, 2023

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும், தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளன.

கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில், விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்தநிலையில், அந்த பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பேருந்துகள் மற்றும் வேன்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பயணிகள் போக்குவரத்தில் இருந்து நீக்கப்பட்ட ஏராளமான வாகனங்கள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுவதாக நீண்ட காலமாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இதற்கமைய, தற்போது, சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, பொருத்தமற்ற நிலையில் உள்ள வாகனங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படவுள்ளது. அதனையும் மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம்: தீவக வலய பாடசாலைகள் நாளை வழமைபோன்று இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அம...
தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டில் 411.9 பில்லியன் ரூபா வருமானம் - தேயிலை ஏற்றுமதி துறை தெரிவிப்பு!
பண்டத்தரிப்பில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீ...