யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம்: தீவக வலய பாடசாலைகள் நாளை வழமைபோன்று இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, November 29th, 2020

தீவக வலய பாடசாலைகள் நாளை வழமைபோன்று இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் நிலவும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் -.

காரைநகர் மற்றும் வேலணை பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் சமூக மட்டத்தில் நடமாடியதாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தொற்றுக்குள்ளானவருடன் நேரடியாக தொடர்புபட்ட பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. அத்துடன் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள்.

மேலும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான விசேட கூட்டம் நாளையதினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. அந்தக் கூட்டத்தின் முடிவில் அதற்குரிய முடிவு எட்டப்படும் என்றுமு; அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாட்டின் எந்தப் பகுதியையும் முடக்கும் தேவை கிடையாதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க...
மாகாண சபைத் தேர்தலை எந்நேரத்திலும் நடத்த தயார் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவிப்பு!
கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு ஓராண்டு பூர்த்தியை ஒட்டி கௌதாரிமுனை மக்களுக்கு வயற்காணி வழங்கல் - இணை...