60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை இருவரை பெற்றுக்கொள்ளவில்லை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் யாழ்ப்பாணத்தில் எனவும் சுட்டிக்காட்டு!
Monday, October 4th, 2021
அறுபது வயதுக்கு மேற்பட்ட சுமார் 85 ஆயிரம் பேருக்கு இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இங்கு தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்களில் தலா 3 ஆயிரம் பேர் உள்ளனர்.
தடுப்பூசி தொடர்பில் சமூகத்தில் காணப்படும் தவறான கருத்துக்கள், சமூக ஊடகங்களில் பரவும் போலி வதந்திகள் போன்றவை இதற்கு முக்கியமான காரணங்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலாலி விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவு!
கொரோனா தொற்றின் எதிரொலி: குழந்தைகளுக்கு புதிய ஆபத்து உருவாகியுள்ளது என யுனிசெவ் அதிர்ச்சி அறிக்கை!
மருத்து தட்டுப்பாடு அதிகரிப்பு - யாழ்ப்பாண மக்களிடம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்வைத்துள்ள ...
|
|
|


