கொரோனா தொற்றின் எதிரொலி: குழந்தைகளுக்கு புதிய ஆபத்து உருவாகியுள்ளது என யுனிசெவ் அதிர்ச்சி அறிக்கை!

Sunday, April 26th, 2020

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக குழந்தைகளுக்கு புதிய ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக ஐ.நா. சபையின் ஓர் அங்கமான யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா. சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதால் உலகமெங்கும் உள்ள பல கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு தட்டம்மை, டிப்தீரியா, போலியோ ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் போடுவதை இழக்கிற ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகள் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கும் முகாம்களை நிறுத்தி வைத்துள்ளன. 25 நாடுகள் தட்டம்மை தடுப்பூசி முகாம்களை ஒத்திப்போட்டுள்ளன.

இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் தோன்றுவதற்கு முன், ஒரு வயதுக்கு உட்பட்ட 2 கோடி குழந்தைகள் போலியோ, தட்டம்மை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு மருந்துகளை பெறுகிற வாய்ப்பினை இழந்து இருக்கின்றனர்.

இப்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிற நிலையில், குழந்தைகளுக்கு தேவையான தடுப்பு மருந்துகளை கொடுக்க முடியாத சூழலால் இந்த ஆண்டு மட்டுமின்றி அதைத்தாண்டியும் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகிற தட்டம்மை, டிப்தீரியா, போலியோ உள்ளிட்டவை பேரழிவை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது என கூறப்பட்டுள்ளது

Related posts: