கொழும்பு மாவட்டத்தில் மட்டும் பதிவு செய்யாத 60,000 வாக்காளர்கள் – தேர்தல் ஆணைக்குழு!

Thursday, August 2nd, 2018

கொழும்பு மாவட்டத்தில் சுமார் 60,000 வாக்காளர்கள் 2018ஃ19 வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யாமல் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வாக்காளர் இடாப்புகளுடன் ஒப்பிடுகையில் 2018ஃ19 வாக்காளர் இடாப்புகளில் சுமார் 60,000 பேர் பதிவு செய்யாமலிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிலைமை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்த வரையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து விடக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார்கள். இந்நிலையில் 2018ஃ19 வாக்காளர் இடாப்பில் சுமார் 60,000 பேர் பதிவு செய்யப்படாமலிருப்பது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் தோல்வியையும் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடையக்கூடிய வேட்பாளர் வெற்றியையும் பெறக்கூடிய ஒரு திருப்பு முனையாக நிலைமை ஏற்படக்கூடும் எனவும் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகத்தர் சுட்டிக்காட்டியுள்ளார்;.

மேலும் இவ்வாறு வாக்காளர் இடாப்புகளில் பதிவு செய்யாமலிருப்பவர்களில் பெரும்பாலானோர் உயர் மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களுமே எனவும் இவர்களில் பெரும்பாலோனோர் தேர்தல்களிலோ அவ்வாறு தேர்தல் இடாப்புகளில் பதிவு செய்வதிலோ அக்கறையில்லாமல் இருப்பதையும் உத்தியோகத்தர் கூறயுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் பல வருடங்களாக வாழும் இவர்களை தேர்தல் இடாப்புகளில் பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு விசேட நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் அவ்வாறான ஏற்பாடொன்றை மேற்கொள்ளமலிருப்பது குறித்த தரப்பு மக்களின் தேர்தல் ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகவே அமையுமெனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

Related posts:

வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்றுமுதல் சட்ட நடவடிக்கை - பொலிஸ் போக்குவரத்து தல...
இலங்கையில் காதலர் தினத்தை முன்னிட்டு கடுமையாகும் சட்டம் – 'காதலுக்கு ஒரு மரம்' நடும் திட்டத்தை அறிமு...
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு - கணினி குற்றப்பிரிவு தெரிவிப்பு!