6 கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Friday, April 16th, 2021
கட்சிகளுக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் 6 கட்சிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த கட்சிகளின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு சிலர் உரிமை கோரியுள்ளதால், சட்ட ரீதியான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், இதனை தீர்க்க அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
வழக்குகள் முடிவடையும்வரை இந்த கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த தீர்மானம் காரணமாக குறித்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர் இந்த கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், குறித்த கட்சிகளின் பெயர்களை வெளியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
000
Related posts:
|
|
|


