அபாயகரமான முறையில் அதி வேகத்துடன் வாகனங்களை செலுத்துவோரைத் தேடும் விஷேட திட்டம் ஆரம்பம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Monday, December 7th, 2020

பிரதான மற்றும் கிளை வீதிகளில் அபாயகரமான முறையில் அதி வேகத்துடன் வாகனங்களை செலுத்துவோரைத் தேடும் பொருட்டு இன்றுமுதல் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அண்மையில் மொரட்டுவ – எகொடஉயன பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு இரு சிறுவர்கள் உட்பட ஒரு கர்ப்பிணித் தாய் விபத்துக்குள்ளானதோடு அவருக்கு கருச்சிதைவும் ஏற்பட்ட சம்பவத்தை கருத்திற் கொண்டே இத்தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிம்புளாவெல பிரதேசத்தில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் பந்தய மொன்று நடாத்தப்படுவதாக கிடைத்த தகவல்களையடுத்து இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது இளைஞர்கள் குழுவொன்றுடன் 24 மோட்டார் சைக்கிள்கள் காவற்துறை வசமாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார். எதிர் வரும் நாட்களில் இவர்களுக்கெதிராக வழக்கு தொடரப்படுமெனவும் இவ்வாறு தொடர்ந்தும் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடாத்துவார்களாயின் அவர்கள் கைது செய்யப்படுவார்களெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: