முட்டை விலை அதிகரிப்பு – நிர்ணய விலையொன்றை அறிவிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரிகள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோரிக்கை!

Tuesday, August 11th, 2020

தொடர்ந்தும் சந்தையில் முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வரகின்றது. அதற்கமைய சந்தையில் முட்டையொன்றின் விலை 22 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இதனால் தமது உற்பத்திகளில் அது தாக்கத்தை ஏற்படுத்தவதாகவும் பேக்கரி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த விலை அதிகரிப்பின் காரணமாக தாம் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அகில இலங்கை பேக்கரிகள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேக்கரி உற்பத்திக்காக அதிளவான முட்டைகள் பயன்படுத்தப்படுவது வழமை. முட்டடையின் விலை அதிகரிப்பால் வெதுப்பக உற்பத்திகள் செய்வதில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.  இதன் காரணமாக சந்தையில் முட்டைக்கான நிர்ணய விலையொன்றை அறிவிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: