முதலாம் தரம் குறித்த முறைப்பாடுகளை முன்வைகவும் – கல்வியமைச்சு!
Thursday, January 4th, 2018
2018ஆம் கல்வியாண்டுக்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் முறையில் ஏதாவது அநீதிகள் நடந்திருப்பின் குறித்த பாடசாலைக்கும் பின்னர் கல்வியமைச்சிற்குஅல்லது சம்பந்தப்பட்ட மாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகளை முன்வைக்குமாறு கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதலாம் தரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப்பட்டியல் பாடசாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதோடு அநீதி இழைக்கப்பட்டோருக்கு நீதிகிடைக்கும் வகையில் முறைப்பாடுகளை ஆராய தீர்மானித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 15ஆம் திகதி முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்ச்சி நடாத்த அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சுதெரிவித்துள்ளது.
Related posts:
ஆரம்பமானது நாடாளுமன்ற கூட்டத் தொடர்: பிரதமர் மஹிந்த உரை!
விடுமுறையை வீட்டிலேயே களியுங்கள் – இராணுவத் தளபதி அறிவுறுத்து!
அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்க திட்டம் - வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவிப்பு!
|
|
|


