ஆரம்பமானது நாடாளுமன்ற கூட்டத் தொடர்: பிரதமர் மஹிந்த உரை!
Thursday, November 15th, 2018
பரபரப்புக்கு மத்தியில் நேற்று கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்றுக்கு அனைவரும் வருகைத் தந்துள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவை உரையாற்றுமாறு சபாநாயகர் அறிவித்த நிலையில், தினேஸ் குணவர்தன எழுந்து நேற்று ஜனாதிபதியால் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசிக்குமாறு வழியுறுத்தியுள்ளார்.
இதை மறுத்த சபாநாயகர் மஹிந்தவுக்கு உரையாற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு அறிவித்தார். எனினும் சபையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பேச விடாமல் நாடாளுமன்றில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாத மஹிந்த ராஜபக்ச தனது உரையை ஆரம்பித்துள்ளார்.
ஆரம்பத்திலேயே கூச்சலிடுபவர்களை பார்த்து நகைச்சுவையாகவும் உரையாற்றியிருந்தார்
Related posts:
முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை!
அரசியல் காரணங்களால் அதிபர் நியமனம் தாமதம் - வடக்கு மாகாண புதிய அதிபர் சங்கம் தெரிவிப்பு!
ஊருக்கு உபதேசம் உனக்கில்லையா யாழ் மாநகர முதல்வா – பாஷையூர் மக்கள் கேள்வி!
|
|
|


