இலவச இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் நாமல் வலியுறுத்து!

Sunday, June 13th, 2021

இ-தக்ஸலாவ திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாக இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் தற்போதைய இ-தக்ஸலாவ அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் நாமல் வலியுறுத்யுள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார்.

ஜூலை 21 ஆம் திகதிக்குள் 200 மாணவர்களுக்கு இ-தக்ஸலாவ திட்டத்தின் மூலம் இலவசமாக இணைய வகுப்புகளை அணுக அனுமதிக்கும் முதல் கட்டத்தை வெளியிடுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு ஊடக நிலையங்கள் மூலம் கல்வி நோக்கங்களுக்காக ஒரு பிரத்தியேக தொலைக்காட்சி சேவையையும் வானொலி சேவையையும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நெருக்கடியால் வரிசையில் நின்றாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் பெரமுனவிற்கே அதிகாரத்தை வழ...
சீனி இறக்குமதியில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடி நடவடிக்கை - ...
அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டும் - இராஜா...