குடாநாட்டில் வெங்காயம் விலை உயர்வு!

Wednesday, May 17th, 2017

குடா­நாட்டில் வெங்­கா­யத்தின் விலை இந்த வருடம் என்றும் இல்­லாத அள­வுக்கு உயர்வடைந்துள்ளது. 50 கிலோ வெங்­கா­யத்தின் விலை 10 ஆயிரம் ரூபாவைத் தாண்­டி­யுள்­ளது. திரு­நெல்­வே­லி­ உட்­பட சந்­தை­களில் ஒரு கிலோ வெங்­கா­யத்தின் விலை 250 இலி­ருந்து 300 ரூபாவரை விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

இந்­நிலையில் தர­மான வெங்­கா­யத்தைப் பெற்றுக் கொள்­ள­மு­டி­யாத நிலை ஏற்படுவதுடன் எதிர்­காலத்திற்கு தேவையான விதை வெங்­கா­யத்­திற்கு பெரும் தட்­டுப்­பாடும் ஏற்­பட்­டுள்­ளது.

யாழ்.மாவட்­டத்தில் கடந்த கால­ போகத்தில் மாரி மழை இல்­லா­மையும் அதே­நேரம் கடும் வரட்சி, வெப்­ப­நிலை அதி­க­ரித்துக் காணப்­பட்ட முரண்­பா­டான கால நிலையாலும் வெங்­காயப் பயிர்ச் செய்கை பெரு­ம­ளவில் சேத­ம­டைந்­துள்­ளது.

சிறு­போ­கத்தில் நடுகை செய்­யப்­படும் வெங்­கா­யமே களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்டு அடுத்த கால­போக பயிர்ச்செய்­கை­யின்­போது விதை வெங்­கா­ய­மாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. யாழ்ப்­பா­ணத்தில் சிறு­போக வெங்­காயப் பயிர்ச் செய்கை உரிய அளவு மேற்­கொள்­ளப்­ப­டாதவிடத்து யாழ்ப்­பா­ணத்தில் பெரு-ம்­போக வெங்­கா­ய செய்­கைக்­கான விதை வெங்­கா­யத்­துக்கு பெரும் தட்­டுப்­பாடு ஏற்­ப­டும்­ நிலை உரு­வா­கி­யுள்­ளது. மேலும் வட­ம­ராட்சிப் பிர­தே­சத்தில் வெங்­கா­யத்தின் விலை அதிகரித்துள்ளது. பல வரு­ட ­கால இடைவெளிக்குப் பின்னர் 50 கிலோ வெங்­காயம் 10 ஆயிரம் ரூபாவிற்கு விற்­கப்­ப­டு­கின்­றது. இப்­பி­ர­தே­சத்தில் உள்ள கம்பர்மலை, புலோலி, அல்வாய், திக்கம் ஆகிய பகு­தி­களில் உள்ள விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து விதை வெங்­கா­யத்­துக்­காக வலி­காமம், புத்­தளம் பிர­தேச விவ­சா­யிகள் போட்டி  போட்டு வெங்­கா­யத்தை கொள்­வ­னவு செய்து வரு­கின்­றனர். இந்நிலையில் கால­போக வெங்­காயச் செய்­கை­யின்­போது கடும் மழை­ பெய்­த­மை­யினால் பெரும்  எண்­ணிக்­கை­யான பரப்­ப­ளவில் பயி­ரிடப்­பட்­டி­ருந்த வெங்­கா­யப்­ப­யிரின் ஒரு பகுதி முற்­றாகச் சேதம­டைந்­தி­ருந்­தது.

இதேவேளை இடையிட்டுப் பெய்த மழையினால் அழிவுற்ற வெங்காயப் பயிருக்கு எந்தவிதமான நஷ்டஈடும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts: