முல்லை. மீனவர்களுக்கு 150 மீன்பிடி படகுகள் இந்தியாவால் அன்பளிப்பு!

Friday, April 1st, 2016
முல்லைத்தீவு மீனவர்களுக்கு 150 படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கும் உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் நேற்று (31)கையொப்பமிட்டன.
மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடல் நிகழ்வில் இந்திய அரசியல் சார்பில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே. சிங்ஹாவும், இலங்கையின் சார்பில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யு. எம்.எம். ஆர். அதிகாரியும் கையொப்பமிட்டனர்.
150 மீன்பிடி படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் முல்லைத்தீவிலுள்ள 300 பயனாளிகள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மின் பாவனையாளர்களிடமிருந்து மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது மின் துண்டிப்பும் இல்லை - மின்...
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - பொலிஸ் ஊட...
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் - பருவபெயர்ச்சி ...