இலங்கையில் அதிகரித்துவரும் நிலையான தொலைபேசி தொடர்புகள்!

Tuesday, December 6th, 2016
இலங்கையில் நிலையான தொலைபேசி தொடர்பாடல் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது பாவனையில் 26 லட்சத்து ஆயிரத்து 196 நிலையான தொலைபேசிகள்; உள்ளன. இவற்றில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசிகள் கேபிள்கள் மூலம் இயங்கக் கூடியவையாகும்.

1990ஆம் ஆண்டு மொத்தமாக மூவாயிரம் பேரே இலங்கையில் நிலையான தொலைபேசி தொடர்பாடலை பெற்றிருந்ததாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது. தற்போது நாட்டில் இரண்டு கோடி 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலையான தொலைபேசி தொடர்புகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் என்று ஆணைக்குழு மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளது

c9fb8258fc7dae80d8d2770a23b8da94_XL

Related posts: