51 நாட்களுக்கு பின்னர் நாளொன்றில் 2,000 க்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Sunday, September 19th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 983ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜுலை 28 ஆம் திகதி நாளொன்றில் பதிவான 2 ஆயிரத்திற்கும் குறைவான தொற்றாளர்கள் எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.
அத்துடன் குறித்த தினத்தன்று ஆயிரத்து 940 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 51 நாட்களின் பின்னர் நாளொன்றில் மீண்டும் 2 ஆயிரத்திற்கமு; குறைவான கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 2 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 260 பேர் குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 31 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது
இதேவேளை இலங்கையில் மேலும் 84 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 30 வயதுக்கு குறைவான மூவரும் 60 வயதுக்கு குறைவான 23 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 58 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே 69 ஆயிரத்து 700 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


