புதிய நேர அட்டவணையில் இயங்கும் நயினாதீவு – குறிகட்டுவான் படகு சேவை !
Sunday, June 2nd, 2024
நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இன்று சனிக்கிழமை தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார்.
நயினாதீவு – குறிகட்டுவான் இடையேயான படகுச் சேவை காலை 6.30 முதல் மாலை 5.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும்.
மற்றும் குறிகட்டுவான் – நயினாதீவு இடையேயான படகுச் சேவை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
56 சதவீத புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கல்வி நிலை சாதாரண தரம் மாத்திரமே - மனித உரிமைகள் மற்றும் சமூக ...
இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு...
உலகின் தலைசிறந்த பயண இடங்களுள் இலங்கைக்கு அங்கீகாரம்!
|
|
|


