அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடை வழங்கியது இலங்கை கிரிக்கட் சபை!

Thursday, May 26th, 2022

சுகாதார துறைக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கட் சபை இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறுவர் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நன்கொடைக்கு நேற்றைய தினம் கூடிய இலங்கை கிரிக்கட் செயற்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

000

Related posts: