யாழ் பல்கலைக்கழக மோதல் விவகாரம் – மாணவர்களுக்கான தண்டணைகள் இறுதி செய்யப்பட்டன!

Sunday, November 29th, 2020

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட படி சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கான தண்டனைகளை பல்கலைக்கழகப் பேரவை இறுதி செய்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 130 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையில் முன்மொழியப்பட்ட தண்டணைகளின் அடிப்படையில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு முன்மொழியப்பட்ட தண்டணைகளை அதன் தலைவரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவு உறுப்பினர் கே.ருஷாங்கன் சமர்ப்பித்தார்.

மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட – பல்கலைக்கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றங்களின் தன்மைக்கேற்ப விசாரணை அதிகாரியினால் வகைப்படுத்தப்பட்ட தண்டனைகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

இதற்கமைய இதற்கமைய எதிர்வரும் நாட்களில் மாணவர் ஒவ்வொருவருக்குமான தண்டணைகள் துணைவேந்தரினால் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: