5 வருட சிறை – எச்சரிக்கிறது ஆட்பதிவுத் திணைக்களம்!

Tuesday, June 11th, 2019

தேசிய அடையாள அட்டை பாவனை தொடர்பில் ஆட்பதிவுதிணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

வோறொருவருக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருத்தல் அல்லது புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டின்கீழ் சில நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இத்தகைய குற்றவாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அல்லது 5 வருட சிறைத்தண்டனையை விதிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அருகில் உள்ள பொலிஸிற்கு அல்லது திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை காணாமல் போகுமிடத்து, புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட பின்னர் காணாமல்போன அடையாள அட்டை மீண்டும் கிடைக்குமாயின் கிராம உத்தியோகத்தர் அல்லது ஆட்பதிவுத்திணைக்களத்திடம் ஒப்படைக்கவேண்டும்.

இன்னொருவரின் தேசிய அடையாள அட்டையை தம்வசம் வைத்திருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார்.

Related posts: