5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஏமாற்றமடைந்த மன்னார் முத்தரிப்புதுறை மக்களுக்கு கிடைக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஏற்பாடு!

Thursday, April 16th, 2020

அரசாங்கத்தினால் தற்போதைய இடர்காலத்தை கருதி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா நிதி மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவின் முத்தரிப்புதுறை கிராம அலுவலர் பிரிவில் முத்தரிப்பு துறை கிராம மக்கள் ஒரு தொகுதியினருக்கு வழங்கப்படாதிருந்த நிலையில் அவர்களுக்கான குறித்த நிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியை அடுத்து வழங்கப்பட்டுள்து.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

தற்போது சமுர்த்தி பயனாளிகளுக்காக 5 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில் சமுர்த்தி பயனாயளிகளாக உள்வாங்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் இருந்த குறித்த பிரதேச மக்களுக்கு வழங்கப்படாத நிலை காணப்பட்டது.

இதையடுத்து குறித்த பிரச்சினை அப்பிரதேச பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகத்தினரது கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து அது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதற்கான தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே சிறு தோட்ட தேயிலை உரிமையாளர்கள், பிராந்திய செய்தி தொடர்பாளர்கள், தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட பல துறையை சார்ந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம தீர்மானித்துள்ளதாக சமூக பாதுகாப்பு, சுகாதார மற்றும் சுதேச அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி உத்தியோகத்தர் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 655 மில்லியன் கிடைக்க பெற்றுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான குழு நேற்யை தினம் ஒன்றுக் கூடியதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளதுடன் இந்த குழுவின் தலைமைத்துவத்தை மத்திய வங்கிய் ஆளனர் வகிக்கின்றமை குறிப்பிடதக்கது

Related posts: