தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் – கோருகின்றார் யாழ் அரசஅதிபர் மகேசன்!

Thursday, July 30th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலைமையாகவும் நடத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் யாவும் தற்போது பூரணப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் தேர்தலில் பங்குபற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் வலய தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், விசேடமாக சுகாதார நடைமுறை ஏற்பாடுகளை மேற்கொள்கின்ற உத்தியோகத்தர்களுக்குரிய பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் ஆளணி கட்டுப்பாடு, போக்குவரத்து, மண்டப ஒழுங்கு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் பொது வசதிகள் போன்ற சகல நடவடிக்கைகளும் அனேகமாக பூரணப்படுத்தப்பட்டுவிட்டன தற்போது இறுதி கட்ட நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் சுமார் 7ஆயிரத்து 795 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளார்கள் . அதேநேரம் 508 நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது

அதே போல இந்த தடவை வாக்குகள் எண்ணும் நிலையங்கள் இரட்டிப்பாக்கப்படவுள்ளது. இதன்படி 89 நிலையங்களில் இந்த வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது. அதில் 73 சாதாரண வாக்களிப்பு நிலையங்களும் 16 தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்களும் ஏற்பாடுகள் செய்யப்படடுள்ளன.

இந்த தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி 29 ஆம் திகதியுடன் முடிவடைந்ததுள்ளது. எனினும் வாக்காளர் அட்டைகள் கிடைக்காப் பெறாதவர்கள் தபால் நிலையங்களுக்கு சென்று தங்களுடைய அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய உள்ளது. அதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட விதத்திலே அவர்களுடைய பிரசாரங்களை மேற்கொள்வது நனற்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலிலே யாழ்ப்பாணத்தில் மொத்தமாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவுசெய்யப்படுவர். அத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அச்சமின்றி காலையிலேயே சென்று வாக்களிக்க வேண்டும் அது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

தேர்தலில் போட்டியிடுகின்ற சகல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தேர்தல் சட்டத்தை மதித்து செயல்படவேண்டும்

தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையானதாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் தேவை எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைக்குமாறு நான் கோரிக்கை விடுகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மக்களுக்கான உரிமை விடயங்களில் நாம் என்றும் பின்நின்றது கிடையாது - எழுக தமிழ் பேரெழுச்சி நிகழ்வ...
போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு கூடுதல் கால அவகாசம் கோரப்படும் - அமைச்சர் மங்கள சமரவீர!
இடர்களை கழைந்து மீண்டும் சுபீட்சமான சகவாழ்வு திரும்ப நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்...