35 வருடங்களுக்குப் பின்னர் யாழ்.மாவட்டத்தில் பனைப்பரம்பல் கணக்கெடுப்பு!
Saturday, November 25th, 2017
35 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பனைகளின் பரம்பல் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பனை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பனை மரங்களின் பரம்பல் பற்றிய கணக்கெடுப்பு 1981 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 11 மில்லியன் பனைகள் காணப்பட்டன. இதுவரை அழிவடைந்த பனை மரங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டால் அதற்களவான விதைகள் நடுவதன் மூலம் பனைமரங்களின் பரம்பலை எமது மாவட்டத்தில் தக்க வைத்துக் கொள்ளலாம்.
நடப்பாண்டிலிருந்து இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை எம்முடன் இணைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நான்காவது டெக்ஸ் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் செல்லும் ஜனாதிபதி!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு - நாளை லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்க கூடும் என்று ...
மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பில் கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறு...
|
|
|


