30 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி பெறாதவர்களைக் கண்டறிய பொலிஸார் சிறப்பு நடவடிக்கை!

ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களைக் கண்டறிய பொலிஸார் கொழும்பில் ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தடுப்பூசி போடுவதற்கு பொலிஸ் சமூக காவல் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் கொவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி போடாதவர்கள் சுகததாச விளையாட்டரங்கிற்குச் சென்று அவர்களின் முதல் டோஸைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். பல்கலை விவகாரம்: மாணவர்கள் ஒன்றியத் தலைவரை தாக்கியவர்களுக்கு பிணை!
புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிறப்புக் கவனம்!
வெடிகுண்டு புரளி: வலிகாமம் தெற்கு பிரதேச சபை அமர்வில் குழப்பம்!
|
|