புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிறப்புக் கவனம்!

Wednesday, January 9th, 2019

சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தி தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக காத்திரமான தீர்மானமொன்று எடுப்பது அத்தியாவசியமாகும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் சிறார்களுக்கு புலமை பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களில் உரிய கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts: