2500 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் இவ்வாரம் வழங்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவிப்பு!
Saturday, June 10th, 2023
கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.
அதேவேளை, ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான நியமனக் கடிதங்கள் அந்தந்த மாகாண கல்விக் காரியாலயங்களில் வழங்கப்படும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வியமைச்சு தற்போது மேற்கொண்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வெளிநாட்டவர்களுக்கு வேலை இல்லை - சவுதி
திறந்த வர்த்தக வலயம் கலகெதர பிரதேசத்தில் ஆரம்பம்!
பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க மறுத்தனரா தாதியர்கள்? - வவுனியா வைத்தியாசாலையில் நடந்த...
|
|
|


