பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு தரப் பரிசோதனை!

Thursday, March 10th, 2016

குடாநாட்டில் பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் தரத்தைப் பரிசோதனை செய்யும் நடவடிக்கையை யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பிரிவு நேற்று(09) மேற்கொண்டது.

யாழ்.மாவட்டச் மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பிரிவின் ஆணையாளர் மதிவண்ணன் தலைமையில் மாநகர சபை மைதானத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தரப் பரிசோதனைக்கு யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பொலிஸாரும் தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கினர்.

முச்சக்கரவண்டியிலுள்ள தேவையில்லா கண்ணாடிகள், தேவையற்ற அலங்கரிப்புக்கள், அநாவசியமான படங்கள் ஒட்டப்பட்டுள்ளமை மற்றும் இருக்கைகள், கம்பிகள் பளுதடைந்து உள்ளனவா உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது பரிசோதனை செய்யப்பட்டது.

அனைத்தும் சீராக காணப்படும் முச்சக்கரவண்டிகளுக்கு தரப்பரிசோதனை செய்யப்பட்ட ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டது. குறைகள் இனங்காணப்பட்டவர்களுக்கு அதனைச் சீர் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் குறைகளைச் சீர்செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தவறின், மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: