பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம்; தொடர்பாடல் தகவல்களை வழங்கியவருக்கு இலஞ்சம் வழங்கியமை வெளியானது!

Monday, December 18th, 2017

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு தொடர்பாடல் தகவல்களை பெற்றுக் கொடுத்தவருக்கு மில்லியன் கணக்கில் இலஞ்சம் வழங்கியமை அம்பலமாகியுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் ச்சாலி என்ற அடையாளம் தெரியாத ஒருவருக்கு 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 97 மில்லியன் ரூபாவை பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் வழங்கியதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி நுவன் சல்காது தெரிவித்துள்ளார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான கசுன் பாலிசேனவின் ஆலோசனைக்கு அமைய, சார்லி, டெங்கோ மற்றும் கார் என்ற மூவருக்கு பணம் வழங்கப்பட்ட ஆவணங்கள் நுவன் சல்காதுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

லிட்டல் ஜொன்னி மற்றும் வுல்வரின் என்ற அடையாளம் காணப்படாதவர்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழியர் சேமலாப நிதியத்தை சேர்ந்த ஒருவரை அடையாளப்படுத்துவதற்காக லிட்டல் ஜொன்னி என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் தகவல்களை பெற்றுக் கொடுக்கும் நபரை அடையாளப்படுத்துவதற்காக வுல்வரின் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல், டபில்யூ. எம் . மென்டிஸ் மற்றும் பேர்ப்பச்சுவல் அசெட்ஸ் MANAGEMENT ஆகிய நிறுவனங்களுக்கு நிதி செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Related posts: