மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை குறித்து சுயாதீன விசாரணை – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவு!

Thursday, October 8th, 2020

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலாளிமார்கள், தனியார் துறை தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய, அந்த தொழிற்சாலையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பதை ஆராய்வது இதன் நோக்கமாகும் என அமைச்சின் செயலாளர் எம்.பீ.யூ.டீ.கே. மாபா பத்திரன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலின்போது முதலாளிமார், தனியார் பிரிவு தொழிற்சங்கம் மற்றும் தொழில் அமைச்சு இணைந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாகவம் இந்த கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்துப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts:

விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!
நெருக்கடியான தருணங்களில் எல்லாம் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - இந்திய வெளிவிவகார அமைச்சர் ...
வெளிப் பொறிமுறையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது - வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உறுதிபடத் தெரிவிப...