மின்வலுவை சிக்கனமாக பாவிக்கவும் – மக்களிடம் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா கோரிக்கை!

Thursday, February 9th, 2017

நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் சார்ந்த நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம், கடும் வறட்சி காரணமாக வெகுவாக குறைந்துள்ளது. எனவே, மின்வலுவை சிக்கனமாக பாவிக்கமாறு பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மக்கள் நாளொன்றில் 2300 மெகாவொட் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறையும் பட்சத்தில் தொடர்ச்சியாக 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிப்பது கஷ்டமானது என அமைச்சர் குறிப்பிட்டார். மின்சார நெருக்கடியை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக 60 மெகாவொட் மின்சலுவை கொள்வனவு செய்யவும், 20 மெகாவொட் மின்வலுவை தேசிய வலைப்பின்னலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டார்

ajith-600x345

Related posts: