ஊனமுற்ற இராணுவத்தினருக்காக தற்போது மாதாந்தம் 65,000 ரூபா வரை செலவு!

Wednesday, November 9th, 2016

ஓய்வூதியம் வழங்கத் தகுதியான கால எல்லைக்கு முன்னதாக அங்கவீனமுற்ற நிலையில் சேவையில் இருந்து இடைவிலகிய முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தற்போது மாதாந்தம் 65,000 ரூபாவரை செலவிடப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு 2008 – 2009ம் ஆண்டு வரை 28 பிரச்சினைகள் இருந்ததாகவும் அவற்றில் 25துக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அத்துடன் முப்படையினருக்கான ஓய்வூதியம் மற்றும் போனஸ் தொடர்பான சுற்றறிக்கை பிரிவுகளில் இரண்டில் மாற்றம் செய்து அவர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க நேற்று முன்தினம் தீர்மானிக்கப்பட்டதாகவும் கருணாசேன ஹெட்டியாராச்சி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க நேற்றையதினம் குறித்த முன்னாள் இராணுவத்தினர் பாரிய போராட்டத்தினை முன்னெடுத்ததற்கு பின்னால் எவரேனும் இருக்கலாம் அல்லது ஏதேனும் சக்திகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

dig3141052_23032016_kaa_cmy

Related posts: