25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இறுக்கமான பயணக்கப்பட்டுப்பாடு – விவசாயம் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என துறைசார் அமைச்சுக்கள் தெரிவிப்பு!

Saturday, May 22nd, 2021

நாட்டில் 21 ஆம் திகதி 11 மணிமுதல்  நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் அன்றிரவு 11மணி வரையில் நடமாட்டத்தடை தளர்த்தப்படும் அஇதேவேளை அன்றிரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் மீள நடமாட்டத்தடை அமுல்ப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மீன் மொத்த விற்பனை நிலையங்களை திறப்பதற்கு வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விவசாயிகளின் உற்பத்திகளை பகிர்வதற்காக 7 பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைக்குமாறு விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: