வவுனியா வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தின் நால்வர் சடலங்களாக மீட்பு – திவிர விசாரணையில் பொலிசார்!
Tuesday, March 7th, 2023
வவுனியா – குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளன.
42 வயதுடைய தந்தை, 36 வயதுடைய தாய் மற்றும் 3 மற்றும் 9 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தந்தை தமது குடும்பத்தினரை கொலை செய்து விட்டு, தாம் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டனர். எவ்வாறாயினும், இதுவரை அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில், வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பிரதமர் வியட்நாம் பயணம்!
ஜனவரி முதல் தொடர்ச்சியாக மின்சாரம் - வருடம் இருமுறை கட்டண திருத்தம் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்த...
அனைத்துப் பாடசாலைகளினதும், 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம...
|
|
|


