நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்போக்குவரத்தில் சமாசப் படகும் சேவையில் ஈடுபடவுள்ளது – கடற்தொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் தெரிவிப்பு!

Saturday, November 13th, 2021

நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்போக்குவரத்தில் காணப்படும் மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் எதிர்வரும் வாரம்முதல் கடற்தொழில் சங்கங்களின் சமாசப்படகும் சேவையில் ஈடுபடவுள்ளதாக கடற்தொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு குறிகாட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் புறப்படும் எனத் தெரிவித்துள்ளனர்

இதனிடையே வடதாரகைப் படகு ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் இரண்டு சேவைகளை வழங்கி வருவதுடன் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் படகு திங்கள், புதன் மற்றும் சனி ஆகிய நாட்களில் சேவையில் ஈடுபடுவதால் அது தவிர்ந்த மேற்குறித்த இரண்டு நாட்களில் சமாசப்படகு சேவையில் ஈடுபடவுள்ளது.

பொருட்கள் கொண்டு செல்வோர், மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்வோர், வியாபார நோக்கத்துடன் செயற்படுபவர்களுக்கு இப் படகு சேவை மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

புதிய தேர்தல் திருத்தச் சட்டம்: போட்டியிடாமலேயே பெண்கள் வெல்ல வாய்ப்பு - தேர்தல் மேலதிக ஆணையாளர் தெர...
நாட்டின் சில பாகங்களில் இன்று 100 மில்லமீற்றருக்கும் அதிக பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்...
புதிய பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!