ஜனவரி முதல் தொடர்ச்சியாக மின்சாரம் – வருடம் இருமுறை கட்டண திருத்தம் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Monday, November 28th, 2022

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம்முதல் நாட்டில் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. ஒரு கட்டத்தில் நாளாந்த மின்வெட்டு 13 மணிநேரம் வரை அதிகரித்தது.

எனினும், இதுவரை இரண்டு மணித்தியாலங்களுக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களில் மின்வெட்டை பாரியளவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மின் கட்டண திருத்தம் இன்றி தொடர்ச்சியான மின்சார விநியோகம் சாத்தியமில்லை.

எனவே, ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின் கட்டணத்தை திருத்தியமைப்பது சிறந்தது என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது இலங்கைக்கான சிறந்த ஆற்றல் மூலமாகும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: