டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!

Saturday, March 4th, 2017

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப்பெண் ஒருவர் டெங்கினால் தான் பாதிக்கப்பட்டார் என்பதை அறியாத நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சில தடவைகள் சிகிச்சை பெற்ற அவர் நேற்று காய்ச்சல் அதிகரித்த நிலையில் அந்த தனியார் வைத்தியசாலையில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட முன்னரே அவர் உயிரிழந்தார். என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண சிவப்பிரகாசம் வீதியைச் சேர்ந்த நந்தகுமார் லக்‌ஷி வயது33 என்ற இரு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவார். அவரது 9 வயது மகனும் டெங்கு காய்ச்சலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மேற்படி பெண் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சில தடவைகள் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை அங்குள்ள வைத்தியர் கண்டறியாமல் மருந்துகளை வழங்கினார் எனவும் கூறப்படுகின்றது.

நோய் முற்றிய நிலையில் மேற்படிப்பெண் நேற்றுக்காலை தனியார் வைத்தியசாலைக்கு சென்றார். அங்கிருந்து உடடியாகவே அம்புலன்சில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அங்கு அவர் உயிரிழந்தார். உயிரிழந்த பின்னரே அவர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வைத்திய நிலைய வைத்தியர் அவரது நோயைக் கண்டறிந்து மேலதிக சிகிச்சைகளை பெற்றக்கொள்வதற்கு வழிப்படுத்தியிருந்தால் அவர் தப்பியிருப்பார் என்று உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டது.

death331

Related posts: