சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2023

அனைத்து தரங்களுக்குமான சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று தரங்களிலும் சுமார் 5000 அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். அவர்களின் நியமனக் கடிதங்களை அடுத்த மாதம் 4ஆம் திகதி வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பிரதமரின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம...
இளைஞர் தலைமுறையை புதிய தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கு விசேட நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு...
பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவி...