2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று !

Wednesday, December 13th, 2023

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்றையதினம் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

முன்பதாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த நவம்பர்  மாதம் 14 ஆம் திகதிமுதல் நவம்பர் 21 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

இந்நிலையில் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஸ்ரீலங்காலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில் இறுதி வாக்கெடுப்பு இன்றையதினம் மாலை நடைபெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அறிய முடிகிறது.

இதேவேளை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவு வழங்கிய வடிவேல் சுரேஷ் எம்.பிக்கு ஜனாதிபதி பல பதவிகளை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: