சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை: மூவருக்கு 99 ஆயிரம் ரூபா அபராதம்!

Thursday, November 24th, 2016

மாசுத் துணிக்கைகள் கலந்த குடிநீர்ப் போத்தல்களை விற்பனை செய்தமை மற்றும் பொய்யான தகவல்களைப் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு வழங்கிய உற்பத்தியாளர்கள், முகவர், விற்பனையாளர்கள் ஆகிய மூவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டமையை அடுத்து நீதிவான் மூவருக்கு 99 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

முல்லைத்தீவுப் பகுதியில் விற்பனை செய்யப்படும் குடிநீர்ப் போத்தல்களில் மாசுத்துணிக்கைகள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள், இது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தியமையடுத்து அப்பகுதியிலுள்ள வங்கி, மின்சாரசபை ஆகிய நிறுவனங்களிலிருந்த குடிநீர்ப் போத்தல்களைச் சோதனை செய்த போது மாசுத்துணிக்கைகள் இருப்பதை அவதானித்துள்ளனர். இதையடுத்து 20லீற்றர் கொண்ட 10 குடிநீர்ப் போத்தல்களைக் கைப்பற்றி முல்லைமாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்த சுகாதாரப் பரிசோதகர், உற்பத்தியாளர், முகவர், விற்பனையாளர் ஆகிய மூவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மூவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டமையை அடுத்து நீதிவான் மேற்படி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

courtf2ffd1

Related posts: