நிர்ணய விலைக்கு உட்பட்ட பொருள் தொடர்பில் மாத்திரமே சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் – நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022

வர்த்தகர்களினால் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அது நிர்ணய விலைக்குட்பட்ட பொருளாக காணப்பட்டால் மாத்திரமே வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல மேலும் கூறுகையில்-

தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானியை பிரசுரித்துள்ளது.

அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட பொருட்கள் வர்த்தகர்களினால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதனை ஆதாரத்துடன் முறைப்பாடு செய்தால், முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படும்.

உரிய முறைப்பாடு பரிசீலனை செய்யப்பட்டு வர்த்தகர் தவறிழைத்திருப்பாராயின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிர்ணய விலைக்கு உட்படாத பொருட்களின் விலை தொடர்பில் உற்பத்தியாளர்களே விலையை நிர்ணயிப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை - நாளைமுதல் நடைமுறைப்படுத்த...
பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைப்போல முன்னெடுக்கவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது – பிரதமர...
பயணச்சீட்டு வழங்காத போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட ...