ரஷ்யாவுடனான நல்லுறவை எதிர்வரும் நூற்றாண்டுக்கு வலுவுடன் முன்னெடுப்பதே நோக்கம் – ஜனாதிபதி

Saturday, March 25th, 2017

ரஷ்யாவுக்கும் இலங்கைக்குமிடையிலான 60 வருட கால இருதரப்பு நல்லுறவை எதிர்வரும் நூற்றாண்டுக்கு வலுவுடன் முன்னெடுப்பதே நோக்கமாகுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் மொஸ்கோ நகரில் இலங்கை தூதரக அலுவலகத்தில் ரஷ்யாவில் உள்ள இலங்கையர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி உரையாற்றினார்.

அந்நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்துறையில் பணியாற்றுவோர், மாணவர்கள், வர்த்தக சமூகத்தினர் இந்த  நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமது இந்த விஜயம் சமகால அரசாங்கம் சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் கொள்கையை தெளிவாக எடுத்து காட்டுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சர்வதேச ரீதியில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமகால அரசாங்கம் மேற்குலக நாடுகளுக:க மாத்திரமே சார்பான அரசாங்கம் என்று சிலர் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் இவர்களது அனைத்து குற்றச்சாட்டுக்களையும் இந்த சந்தர்ப்பத்தில் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.

அரசாங்கம் நடுநிலை வெளிநாடடு கொள்கையை முன்னெடுத்து வருகிறது. இதனை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் காரணமாக இலங்கை உலக நாடுகளுடன் நட்புறவை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. சமீபகாலத்தில் இலங்கை சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளுடனும் புரிந்துணர்வுடன் முன்னோக்கி பயணிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இந்த விஜயத்தில்  ஏற்பட்டுள்ள இரு தரப்பு தொடர்புகள் மூலம் கிடைக்கும் பயன்கள் தாய் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பெரிதும் உதவும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Related posts:

ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய 2 நாட்களுக்...
வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு...
புகையிரத திணைக்களங்களுக்கு சொந்தமான நிலங்கள் விவசாய செய்கைக்காக குத்தகைக்கு விடப்படும் - ஜனாதிபதி ஊட...