எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்கத் தயார் – இராணுவ தளபதி!

Thursday, July 6th, 2017

இலங்கை இராணுவம் எந்தவொரு போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 22 ஆவது இராணுவத் தளபதியாக பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு, இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் சட்டத்தை மதிக்கும் இராணுவமாகும். தண்டனை சட்டம் மற்றும் இராணுவ சட்டம் என இரண்டுக்கும் இராணுவம் உட்பட்டுள்ளது. எனவே, தவறுகள் செய்வதற்கான வாய்ப்பு இராணுவத்துக்கு குறைவாக உள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்

Related posts:

முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பம் - கல்வி அமைச்சு தெரிவிப்பு!
ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது - பிரதமர் ரணில் விக்கிரமசிங்...
போக்குவரத்து அமைச்சர் பந்துல நடவடிக்கை - வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்கள் இன்...