2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, July 7th, 2023
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளது.
இதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ம் ஆண்டு டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்ட சாதாரணத் தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எல்லைதாண்டும் மினவர் பிரச்சினை தொடர்பில் நவம்பர் 5ஆம் திகதி அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை!
இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு 50,000 தென்னங்கன்றுகள்!
11 சிறிய குளங்களை ஒன்றாக்கி 700 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறும் திட்டத்துக்கு கிளிநொச்சியில் அனுமதி!
|
|
|


