எல்லைதாண்டும் மினவர் பிரச்சினை தொடர்பில் நவம்பர் 5ஆம் திகதி அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை!

Thursday, October 6th, 2016

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்திருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் புதுடில்லியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜய​மொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முற்பகல் தாஜ் ​​பலெஸ் ஹோட்டலில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தபோது மீனவர் பிரச்சினை தொடர்பான இந்தத் தீர்மானத்தை தெரிவித்திருக்கிறார். மீனவர் பிரச்சினைக்கு முடிவு காண்பதற்காக தாம் தொடர்ச்சியாக கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதுதொடர்பில் இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்களின் தலைமையில் கடற்றொழில் அமைச்சர்களையும் உள்வாங்கி உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அது நவம்பர் 5 இல் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பல சந்தர்ப்பங்களில் பல்வேறுபட்ட விஷயங்கள் ஆலோசிக்கிப்பட்டிருப்பதை நினைவூட்டிய சுஷ்மா சுவராஜ் அதிகாரத்தில் இருந்த போதும் அதிகாரத்தில் இல்லாத சந்தர்ப்பங்களிலும் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனக்கு இருந்த நட்புறவு இன்றளவும் கொஞ்சமும் முரண்படவில்லை என்று தெரிவித்தார்.

பிராந்தியப் பயங்கரவாதம் போன்று எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாகவும் இங்கு நீண்ட நேரம் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அமைதி சமாதானத்துக்காக முன்வரும் சகல சக்திகளையும் ஒன்றிணைத்து பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

பிராந்தியத்தில் சமாதானத்தை உறுதிபடுத்த இலங்கை அதன் முழு ஒத்துழைப்பையும் பெற்றுத் தருவதில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக இங்கு சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்காலத்தில் இந்த நிலைப்பாட்டிலிருந்து விலகப் போவதில்லை என உறுதியளித்தார்.

1071753119ra

Related posts: