2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 சாதாரண தர பரீட்சார்த்திகள் உயர்தர கற்கையை தொடர தகுதி – புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டையும் வழங்கப்பட மாட்டாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 பரீட்சார்த்திகள் உயர்தர வகுப்புகளைப் பின்பற்றத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (25) வெளியான க.பொ.த தரப் பரீட்சை முடிவுகளின்படி தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10 ஆயிரத்து 863 பேர் 9 ஏ சித்தி பெற்றுள்ளனர்.
மேலும், 498 பரீட்சார்த்திகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதனிடையே
இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களின் வருகைப் பதிவுகளை கொண்ட முறைமை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|