கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டபோதும் அதற்கான மருத்துவத்தை பெறத்தவறியதன் விளைவுகளே அதிக உயிரிழப்புகள் பதிவாக காரணம் – சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டு!

Thursday, June 10th, 2021

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டபோதும் குறித்த நபர்கள் உடனடி மருத்துவ சிகிச்சையை பெறத்தவறியதன் காரணமாகவே பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ஆலோசகர் பட்டுவான் துடாவ சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய கொரோனா மரணங்கள் குறித்து ஆராய்வகளை மேற்கொண்டபோது இது புலனாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வைரசினால் ஏற்படும் மோசமான பாதிப்புகள் 80 வீதமான நோயாளிகளில் வெளிப்படாது என்றும் தெரிவித்துள்ள அவர் 20 வீதமான நோயாளிகளிலேயே வெளிப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மோசமாக பாதிக்கப்படக்கூடியவர்களை அடையாளம் காண்பது அவசியம் இல்லாவிட்டால் அவர்களை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லாமல்போய்விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன்காரணமாக நோய் அறிகுறிகள் தென்படுவதாக எவராவது கருதினால் அவர்களை உடனடி மருத்துவ கிசிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: