அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு, மாகாண கல்வி, விவசாயம் மற்றும் சுகாதார அமைச்சு, வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகம், ஆளுநர் அலுவலகம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஆதரவுடன் வடமாகாணத்தில் 150 பாடசாலைகளை இலக்கு வைத்து தொழில்முனைவோர் பாடசாலை தோட்டக்கலை ஆரம்பிக்கப்பட்டது.

தொழில்முனைவோர் பாடசாலை தோட்டக்கலை வெற்றியடைந்துள்ளதுடன் முயற்சிகள் அமைச்சர் தலைமையில் மல்லாவி மத்திய கல்லூரியை மையமாக கொண்டு ஆரம்பமாகி நாளை நிறைவடையவுள்ளது

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கன் திலீபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

000

Related posts: